பிரபல நடிகை பார்வதி நாயர் சமூகவலைத்தள பக்கத்தில் தனது ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜுன் ரெட்டி . இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது . இதை தொடர்ந்து இந்த படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க பார்வதி நாயரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து ரசிகர் ஒருவர் பார்வதி நாயரிடம் சமூக வலைதளப் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு நடிகை பார்வதி நாயர் ‘அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான். அது நல்ல படம். அந்த படத்தை நான் தவறவிட்டிருக்க கூடாது. ஆனால் எதுவாக இருந்தாலும் நமக்கு கிடைப்பது தான் கிடைக்கும். அதைவிட இன்னும் நிறைய நல்ல படங்கள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என கூறியுள்ளார்.