Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குட்டியுடன் வழிமறித்த யானை…. தலை தெறிக்க ஓடிய டிரைவர்கள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

யானை தனது குட்டியுடன் காரை வழிமறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரியானது கர்நாடக மாநிலத்தில் விளையும் கரும்புகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்கிறது. அப்போது அந்த வழியாக செல்லும் லாரி ஓட்டுனர்கள் சாலையோரம் கரும்புகளை வீசுவார்கள். இதனை எதிர்பார்த்து ஏராளமான யானைகள் அங்கு காத்துகொண்டிருக்கும். இந்நிலையில் யானை ஒன்று தனது குட்டியுடன் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்திருந்தது. அப்போது கரும்புகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று தேசியநெடுஞ்சாலையில் வந்தது.

இந்நிலையில் யானை லாரியை வழிமறித்து கரும்புகளை தனது தும்பிக்கையால் இழுக்க முயன்றுள்ளது. ஆனால்  லாரியை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக ஓட்டி சென்றதால் யானை மிகவும் கோபமடைந்தது. அதன்பின் யானை சாலையில் வரும் வாகனங்களை மறித்து டிரைவர்களை துரத்திகொண்டு ஓடியது. இதைப்போல் அந்த சாலை வழியாக வந்த காரையும் யானை மறிக்க முயன்றது. ஆனால் டிரைவர் வேகமாக காரை இயக்கி தப்பிச்சென்றார். இதனை செல்போனில் படம் பிடித்த ஒருவரையும் யானை துரத்தியது. ஆனால் அவர் சாலையோரம் நின்ற ஒரு லாரியின் பின்புறம் சென்றதால் தப்பித்து விட்டார். இதனால் அங்கு 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின் யானை தனது குட்டியுடன் காட்டுபகுதிக்குள் சென்றுவிட்டது.

Categories

Tech |