சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தவருக்கு சனம் ஷெட்டி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யா நேற்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடினார். சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடித்து வரும் எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Heightu le enna iruku brother..Avanga talent dhan weightu ! 🙂🌟
— Sanam Shetty (@ungalsanam) July 23, 2021
அந்த வகையில் பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர் ‘சூர்யாவை விட சனம் ஹைட்டு’ என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு சனம் ஷெட்டி ‘ஹைட்டுல என்ன இருக்கிறது பிரதர்.. அவங்க திறமை தான் வெயிட்டு’ என பதிலளித்துள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது .