Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking : தமிழகத்தில் அக்.21 இடைத்தேர்தல்…!!

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி , நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதாலும் , விக்கிரவாண்டி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்தாலும் இரு தொகுதிகளும் காலியாக உள்ளன. எனவே ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்பை டெல்லியில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  இதில் நாங்குநேரி,விக்கிரவாண்டி அக்டோபர் 21_ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். அதே போல செப்டம்பர் 23-ஆம் தேதி வேட்புமனுத்தாக்கள் செய்யலாம் என்றும் , அக்டோபர் 24-ஆம் தேதி இரண்டு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமென்றும் தெரிவித்தார்.

Categories

Tech |