தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
இது தகவல் பரிமாற்ற செயலியாக மட்டுமல்லாமல், வீடியோ, ஆடியோ, வீடியோ கால், லொகேஷன் ஷேரிங் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. வாட்ஸ் ஆப்பில் சிறப்பு அம்சங்கள் பல இருப்பது போலவே இதில் பிரச்சினைகளும் இருக்கின்றன. அதனால் உங்களது வாட்ஸ் ஆப்பில் மொபைல் நம்பரை சேவ் செய்யாமலேயே எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி உள்ளது. அதற்கு நீங்கள் நேரடியாக மொபைல் போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாமல் மொபைல் போன் அல்லது லேப்டாப்பில் வெப் பிரவுசர் மூலமாக அவர்களது வாட்ஸ் ஆப் நம்பரில் சேட் செய்யலாம். அதற்கு நீங்கள் வெப் பிரவுசரை ஓப்பன் செஉது அதில் http://wa.me/PhoneNumber என டைப் செய்ய வேண்டும். இங்கே PhoneNumber என்பது நீங்கள் அனுப்ப வேண்டிய மொபைல் நம்பராகும்.
உதாரணமாக, நீங்கள் +919876543210 என்ற நம்பருக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ் செய்ய வேண்டுமென்றால் http://wa.me/919876543210 என்ற முகவரியை டைப் செய்து உள்நுழைய வேண்டும். இவ்வாறு உள்நுழைந்தால் நீங்கள் சேட் செய்யவேண்டிய நம்பரில் நேரடியாக சேட் செய்யலாம். வாட்ஸ் ஆப்பில் செல்லத் தேவையில்லை. இவ்வாறு சேட் செய்வதன் மூலம் அவர்களது நம்பரை சேவ் செய்யமலேயே நீங்கள் பேச முடியும். பிரச்சினைகளும் வராது.