Categories
தேசிய செய்திகள்

போன் வாங்க இதுதான் நேரம்…. ஆஃபர் போட்ட பிலிப்கார்ட்…. செக் பண்ணி பாருங்க….!!!!

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு மற்றும் அதன் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. ஃபிளிப்கார்டு பிக் சேவிங் டே என்ற சிறப்பு விற்பனை இன்று முதல்  ஜூலை 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடியை ஃபிளிப்கார்டு அறிவித்துள்ளது.

அதன்படி ஃபிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் வாடிக்கையாளர்கள் போகோ எக்ஸ்3 புரோ, ஐபோன் 12, ஐபோன் 12 மினி, சாம்சங் கேலக்ஸி எஃப்62, எம்.ஐ. 11 லைட் போன்ற ஸ்மார்ட்போன்களைத் தள்ளுபடி விலையில் வாங்கலாம். 10 சதவீதம் வரையில் டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். இதுபோன்ற பல சலுகைகளை ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது சிறப்பு விற்பனையில் வழங்குகிறது.

Categories

Tech |