Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“பவுர்ணமியை முன்னிட்டு” திரண்டு வந்த பக்தர்கள்…. அருள்காட்சி அளித்த சுந்தர மகாலிங்கம்….!!

ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சாமி கோவில் அமைந்திருக்கின்றது. அந்த கோவிலுக்கு ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் இருந்து தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு திரண்டு வந்தனர். இதனையடுத்து காலை 7 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தபின் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பின் மதியம் 12 மணிக்கு வனத்துறை கேட் அடைக்கப்பட்டது. இந்த கோவில் மலைபகுதியில் அமைந்து இருப்பதால் பக்தர்கள் இரவில் வளாகப் பகுதியில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆகவே மலை ஏறிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை நேரத்திற்குள் தரை இறங்கினர். அதேபோன்று நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பிற்காக வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு சுவாமி தரிசனம் செய்து திரும்பிய பக்தர்களுக்கு குன்னூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக தாணிப்பாறை வரை செல்வதற்கு வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்து. அதன்பின் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பன்னீர், சந்தனம், இளநீர் உட்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார். ஆகவே பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி மற்றும் கோவில் செயல் அலுவலர் விசுவநாத் போன்றோர் செய்தனர்.

Categories

Tech |