தூங்கிக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராதாபுரம் பகுதியில் ஆறுமுகநயினார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தரமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் சுந்தரமதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
இதனையடுத்து தூங்கிக்கொண்டிருந்த சுந்தரமதியின் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்து விட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து சுந்தரமதி ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.