Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளுக்கு தொல்லைகொடுத்த தந்தை… உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்… 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் வழக்கில் ஈடுபட்ட நபர் உட்பட 3 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கோட்டைசவரிமுத்து(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்த மகள் என்றும் பாராமல் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு புகார் வந்த நிலையில் கோட்டைசவரிமுத்துவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சாயல்குடி மாரியம்மன் தெருவில் வசிக்கும் சுரேஷ்கண்ணன்(34) என்பவர் மது அருந்திவிட்டு, மாதவன் நகரை சேர்ந்த வீரன் என்பவரிடம் மது பாட்டில் வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த சுரேஷ்கண்ணன் வீரனை தாக்கியுள்ளார்.

இதனால் காவல்துறையினர் சுரேஷ்கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் தொத்தமாவடி பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்த சந்திரன்(52) என்பவரை ஏர்வாடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிற்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி சுரேஷ்கண்ணன், கோட்டைசவரிமுத்து, சந்திரன் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |