மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விசா தொடர்பான விண்ணப்பங்களை 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பிரான்ஸ் அரசு வழங்க தொடங்கியுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கம் கொரோனா காரணமாக விசா தொடர்பான விண்ணப்பங்கள் அளித்தலை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது. இந்த விண்ணப்பங்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்ட நிலையில் ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அந்நாட்டு அரசானது விசா தொடர்பான விண்ணப்பங்களை வழங்க தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் மகிழ்ச்சியுள்ளனர்.
மேலும் இந்தியா பிரான்சின் சிவப்புப் பட்டியலில் இருந்த நிலையில் தடுப்பூசி பெற்ற பயணிகள் அனைவரும் அந்நாட்டிற்கு எந்தவித காரணமும் இன்றி வருவதற்கான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரான்ஸ்க்கு வருகை புரிபவர்கள் பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றிதழை வழங்கவேண்டும். மேலும் பிரான்ஸிற்கு வந்தவுடன் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் நாடு கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.