Categories
உலக செய்திகள்

பிரேசிலுடன் ஏற்பட்ட தடுப்பூசி ஒப்பந்தம் ரத்து.. பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!!

பிரேசில் நாட்டுடனான கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
பிரேசில் அரசு, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவேக்சின் தடுப்பூசிகள் 2 கோடி பெற கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது முதலாவதாக கோவேக்சின் தடுப்பூசி 4,00,000 டோஸ்கள் அந்நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனத்தின் வாயிலாக அனுப்புவதற்கு ஒப்பந்தமானது.
எனினும், அந்நாட்டின் எதிர்க்கட்சியினர், பைசர் தடுப்பூசியை விட கோவேக்சின் அதிக விலை என்றும், தடுப்பூசி விஷயத்தில் அதிபர் ஊழல் செய்ததாகவும் குற்றம் சாட்டினர்.
எனவே இது குறித்து, நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவானது விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டுடன் கோவேக்சின் தடுப்பூசிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதில், அதிக பிரச்சனை ஏற்பட்டதால், பாரத் பயோடெக் நிறுவனம், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
எனினும், பாரத் பயோடெக் நிறுவனம் பிரேசிலிற்கு கோவேக்சின் தடுப்பூசியை நேரடியாக அனுப்ப தயாராக இருக்கிறோம் என்றும், அந்நாட்டுடன் சேர்ந்து செயல்படுவதில் எந்த தடையுமில்லை என்றும் தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |