Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதனால தான் இப்படி செஞ்சிட்டாரு…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. மோதிக்கொண்ட இருதரப்பினர்….!!

குடும்பத் தகராறில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் பிச்சைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்த்திபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் மன்னார்குடி பகுதியில் வசிக்கும் செந்தமிழ்செல்வனின் மகளான இலக்கியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு குடும்பத்தினரும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையில் இலக்கியாவை அவர்களது உறவினர் வடுவூரில் உள்ள அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த பிரச்சனையால் பார்த்திபன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த ஒரத்தநாடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்திபன் சடலத்தை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் பார்த்திபனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பார்த்திபனின் இறுதிச்சடங்கு அவரது வீட்டில் நடைபெற்றது. அப்போது இலக்கியா தனது உறவினர்களுடன் அங்கு வந்ததால் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சில பேர் காயம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து இலக்கியா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த ஒரத்தநாடு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |