இறந்து அழுகிய நிலையில் கிடந்த முதியவரின் சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பான்குளம் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டுள்ளனர். அப்போது முதியவரின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.
இதனையடுத்து சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சடலமாக கிடந்த நபர் யார் என்பது குறித்தும், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.