Categories
புதுக்கோட்டை

யார் இப்படி செஞ்சிருப்பா….? மீட்கப்பட்ட பச்சிளங் குழந்தை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

துணியில் சுற்றப்பட்டு கிடந்த பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி பேருந்து நிலையம் அருகில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கிடந்துள்ளது. இந்நிலையில் குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். இதனையடுத்து குழந்தை துணியில் சுற்றப்பட்டு கிடப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண் குழந்தையை பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற நபர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |