புதினா ஆம்லேட்
தேவையான பொருட்கள்:
முட்டை- 4
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
புதினா – தேவையான அளவு
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் புதினா இலைகளை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவி ,
ஆம்லேட்டை சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான புதினா ஆம்லேட் ரெடி!!!