உத்தர பிரதேச மாநிலம் ஹார்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை வைத்து ராதிகா செல்பி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி கையில் வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கை அழுத்தியதால் குண்டு வெடித்துள்ளது. பின்னர் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அவரை வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.