Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி… எய்ம்ஸ் தலைவர் அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்த பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதம் முதல் தடுப்பூசி செலுத்த வாய்ப்புள்ளது. எனவே இது குறித்து எய்ம்ஸ் தலைவர் ரன்தீப் குலேரியா இந்தியாவில் பள்ளிகளை திறக்கும் விதத்தில் சிறுவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் மாட்டினா, அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிகள் சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகள் திறக்கும் விதத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |