Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாட்டால் ஆவேசமடைந்த பொதுமக்கள்…. அனுமதியின்றி நடந்த போராட்டம்…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 50 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள்.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள்.

அதன்படி ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் போடப்பட்ட ஊரடங்கு 4 வாரங்களாக தொடர்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள சிட்னி உட்பட பல முக்கிய பெரிய நகரங்களில் பொது மக்கள் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில் சிட்னியில் கொரோனா குறித்த கட்டுப்பாட்டிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 50 பேரை காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளார்கள்.

Categories

Tech |