Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி பிறந்தநாள் ஸ்பெஷல்… தெறிக்கவிடும் ‘அக்னி சிறகுகள்’ செகண்ட் லுக் போஸ்டர்…!!!

விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்னி சிறகுகள் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது இவர் கோடியில் ஒருவன், அக்னி சிறகுகள், பிச்சைக்காரன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய், அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, நாசர், பிரகாஷ்ராஜ், சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை 24) நடிகர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அக்னி சிறகுகள் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கையில் சிகரெட்டுடன் விஜய் ஆண்டனி மிரட்டலான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் .

Categories

Tech |