இருள் சூழ்ந்துள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் வாழ்வில் தமிழக அரசு ஒளியேற்ற வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கொரோனா பரவலால் தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதிலும் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ஆட்டோவில் மகளிர் பயணிப்பது குறைந்துவிட்டதாக மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ஊரடங்கு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வருமானம் குறைவு என கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுனர்கள் வாழ்வில் ஒளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.