Categories
மாநில செய்திகள்

“ரூ.25 000 செலுத்தி நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்”…. அதிமுக தலைமை அறிவிப்பு..!!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று அதிமுக அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் பரபரப்பாக காணப்படுகிறது.

Image result for அதிமுக

இந்நிலையில் அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், 23ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையிலும் , ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

Categories

Tech |