Categories
மாநில செய்திகள்

மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படை தீவிர கண்காணிப்பு – விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன்..!!

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

அதே சமயம் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில்  விழுப்புரம் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்று ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்றும், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் வீடியோ பதிவுமூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |