பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன் நாட்டில் கலடாகன் பகுதி அமைந்துள்ளது. இந்த கலடாகன் பகுதிக்கு தென்மேற்கில் நேற்று இரவு 8.49 மணிக்கு மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமியின் ஆழத்தில் இருந்து 104.3 கிலோமீட்டர் மையம் கொண்டிருந்துள்ளது.
மேலும் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனை அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.