Categories
தேனி மாவட்ட செய்திகள்

சோதனை சாவடியில் நின்ற போலீசார்… அப்பகுதியில் வந்த சொகுசு கார்… வசமாக மாட்டிய 2 பேர்…!!

தேனி மாவட்டத்தில் சொகுசு காரில் கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் தமிழக-கேரளா எல்லையான குமுளியில் உள்ள கலால் சோதனை சாவடியில் பீர்மேடு இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது குமுளி நோக்கி வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காரில் 200 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்துள்ளனர்.

இதனையடுத்து காரில் இருந்த வண்டிப்பெரியார் பகுதியை சேர்ந்த மிதுன்(22), ஜோபின்(26) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கூடலூரில் இருந்து 4,000 குடுத்து கஞ்சா வாங்கியது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |