இந்தியாவில் ஆவலுடன் பார்த்து ரசிக்கும் இடங்களில் ஒன்று குடியரசுத் தலைவரின் மாளிகை. இந்த மாளிகை அலுவலகத்தில் அருங்காட்சியகங்கள், மொகல் தோட்டம் என மக்கள் பார்த்து ரசிக்க ஏராளம் உள்ளன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது.
தற்போது கொரோனா குறைந்த பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையை சுற்றிப் பார்க்க பார்வையாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் குடியரசு தலைவர் மாளிகையும், குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள அருங்காட்சியக வளாகத்தையும் பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.