Categories
தேசிய செய்திகள்

இந்த அக்கவுண்ட்ல இவ்ளோ லாபமா….? ரூ.30 லட்சம் காப்பீடு… அள்ளித்தரும் வங்கி…!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வாடிக்கையாளர்களுக்கு 30 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்குகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அவற்றை வீட்டில் இருந்துகொண்டே பெறும் வசதியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சலரி ஆக்கவுண்ட் ஹொல்டர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குகிறது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று 30 லட்சம் வரையான விபத்து காப்பீடு. வழக்கமாக சாலை விபத்துகள் இல்லாமல் ஏற்படும் மரணங்களுக்கு 30 லட்சம் வரை விபத்து காப்பீடு வழங்குகிறது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன் பெற எந்த ஒரு கடன் வாங்கினாலும் சேலரி அக்கவுண்ட் வாடிக்கையாளர்களுக்கு 30% செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்படும். இன்னொரு செய்தி என்னவென்றால் சேலரி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஓவர் டிராஃப்ட் வசதியும் பெறலாம். சேலரி அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு லாக்கர் கட்டணத்தில் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது போன்ற பல வசதிகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சேலரி ஆக்கவுண்ட் ஹொல்டர்க்களுக்கு கிடைக்கின்றது. அதுமட்டுமில்லாமல் மினிமம் அக்கவுண்ட் பேலன்ஸ் நெருக்கடி இல்லை. ஆன்லைனில் ஆர்டிஜிஎஸ் நெப்ட் கட்டணங்களும் கிடையாது.

Categories

Tech |