Categories
மாநில செய்திகள்

சபாஷ்! சரியான திட்டம் – தமிழ்நாடு அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையில் ரூ.37 கோடி மதிப்பீட்டில் தொங்கு பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட பிறகு திருவள்ளுவர் சிலைக்கு படகில் அழைத்து செல்வதில் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. அதனால் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் மக்கள் திரும்ப செல்கின்றனர். இதனை தவிர்க்கவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Categories

Tech |