கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அதற்கான சான்றிதழில் தங்களின் பாஸ்போர்ட்டை இணைபதற்கான வழிமுறைகள் பற்றி இதில் பார்ப்போம்.
வெளிநாடு செல்பவர்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டே சான்றிதழில் தங்களது பாஸ்போர்ட்டை இணைப்பதற்கான வழிமுறைகளை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது
இணைப்பதற்கான வழிகள் :
1. முதலில் selfregistration.cowin.gov.in என்ற இணையத்தை open செய்து உள்நுழைய வேண்டும்
௨. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பொழுது கொடுத்த தொலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும்
3. அடுத்தது தங்கள் தொலைபேசி எண்ணிற்கு OTP எண் வரும். அதை உள்ளீடு செய்ய வேண்டும்
4. பின்னர் Raise an issue என்ற option வலது புறம் இருக்கும். அதை தேர்வு செய்யவும்
5. அதன் கீழ் கொடுக்கப்பட்டவற்றில் add passport option தெற்கு செய்ய வேண்டும்
6. பின்னர் யாருடைய பாஸ்போர்ட் விவரங்களை இணைக்க வேண்டுமோ அவரது பெயரை தேர்வு செய்ய வேண்டும்
7. கொடுக்கப்பட்ட இடத்தில் பாஸ்போர்ட் விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும்
8. அனைத்து விவரங்களையும் சரியா என்று சரிபார்த்த பினனர் சுய ஒப்புதல் தெரிவித்து அதை சமர்பிக்க வேண்டும்
9. பின்னர் திரையில் your request for changing id under process என்ற ஒப்புதல் செய்தி திரையில் தோன்றும்
10. அதன் பிறகு மீண்டும் முகப்பு பக்கத்திற்கு செல்ல வேண்டும்
11. விவரங்களை அறிவதற்கு Track Request என்ற Optionஐ தேர்வு செய்ய வேண்டும்
12. உங்களது விவரங்கள் வெற்றிகரமாக பதிவேற்றப்பட்டது என்ற ஒப்புதல் செய்தி திரையில் தோன்றும்
13. பின்னர் முகப்பு பக்கத்திற்கு சென்று பாஸ்போர்ட் விவரம் இணைக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்
வெளிநாடு செல்ல விரும்பும் பயணிகள் மேற்கூறியவாறு தங்கள் தங்கள் தடுப்பூசி சான்றிதழுடன் பாஸ்போர்ட்டை இணைத்துக்கொள்வோம். மேலும் விவரங்களுக்கு District Immunisation (DDHS/CMO/ GCC)ஐ தொடர்ப்பு கொள்ளலாம்