மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தின் கீழ் பயன் பெறுவது எப்படி என்பதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
இளம் வயதிலேயே நீங்கள் ஓடி ஓடி வேலை பார்க்கிறீர்கள். ஆனால் முதுமை காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட கட்டாயம் பணம் அவசியம். உங்கள் குழந்தைகள் உங்களை பார்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. எனவே உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனில் வயதான காலத்தில் பென்ஷன் பணம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மத்திய அரசின் பல திட்டங்கள் தற்போது செயல்பாட்டில் இருக்கின்றது. இதில் மிக முக்கியமான ஒரு தேசிய பென்ஷன் திட்டம். தேசிய பென்ஷன் திட்டம் மத்திய அரசால் செயல்பட்டு வரும் மிகச் சிறந்த முதலீடு திட்டம்.
இந்தத் திட்டம் 2004ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு மட்டும் தொடங்கப்பட்டது. பின்னர் 2009ஆம் ஆண்டில் அனைத்து பொதுமக்களும் இந்த திட்டத்தில் சேர்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 18 முதல் 70 வயது வரை உள்ள எந்தவொரு குடிமகனும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு பான் கார்டு கட்டாயம். இந்த திட்டத்தில் இணையும் நபர்கள் 60 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் எவ்வளவு பென்சன் பெறுவார் என்பது சந்தை நிலவரத்தைப் பொறுத்தது. இந்த திட்டத்தில் 8 சதவீதம் முதல் 12% வரை வருமானம் கிடைக்கின்றது. பொதுத்துறை வங்கியில் நீங்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இந்தத் திட்டத்தில் 2 லட்சம் வரையில் வரிச் சலுகை கிடைக்கின்றது. தனியாக தொழில் தொடங்கி நடத்தும் கணவன் மனைவி ஆகிய இருவரும் தனித்தனியாக கூட இந்தத் திட்டத்தில் கணக்கைத் தொடங்க முடியும்.