Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி….. திமுக VS அதிமுக ஆதிக்கம் செலுத்தியது யார்?

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியதை தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொகுதிகளுக்கும் வருகின்ற அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுமென்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.இதை தொடர்ந்து மாவட்ட நாங்குநேரி தொகுதியான திருநெல்வேலி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியான விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதியை அமுல் படுத்தி கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டு தொகுதியிலும் கடந்த சட்டமன்ற தேர்தல் குறித்த நிலவரம் பார்ப்போம்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விக்ரவாண்டி சட்டமன்ற தொகுதியில் 1, 77 , 581 வாக்குகள் பதிவாகின. அதில் திமுக கூட்டணி வேட்பாளர் 83 ,432 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடம் பிடித்த அதிமுக கூட்டணி வேட்பாளர் 74, 819 வாக்குகள் பெற்றறார். அதே போல  இடைத்தேர்தல் நடைபெறும் மற்றொரு தொகுதியான நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் 2,56,414 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் 86,306 வாக்குகளும் , அதிமுக அதிமுக வேட்பாளர் 51,596 வாக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |