இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அமெரிக்க அதிபர் கிளிண்டன் நடந்து கொண்ட முறை குறித்து 24 வருடங்களுக்கு பிறகு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த 1997-ஆம் ஆண்டு பணிபுரிந்த பில் கிளிண்டன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது என்னென்ன செய்தார் என்பது குறித்த தகவல் ஆவண காப்பகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது 24 வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அந்நாட்டின் புதிய பிரதமராக டோனி பிளேர் பதவி ஏற்றிருந்தார்.
மேலும் பில் கிளிண்டன் இங்கிலாந்துக்கு சென்றிருந்த போது தான் ஒரு விருந்தினராக மட்டுமே இருக்க விரும்புவதாக கூறியதாக அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கிளிண்டன் அரசு பயணத்தை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதி இங்கிலாந்து அதிகாரிகள் பல திட்டங்களை செயல்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இங்கிலாந்து நாட்டிற்கு அரசு முறை பயணமாக செல்பவர்களுக்கு அந்நாட்டில் சுவையான உணவுகளை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் பில் கிளிண்டன் எலிசபெத் மகாராணியின் டீ விருந்தை தவிர்த்துவிட்டு இந்திய உணவுவகைகள் மீதே நாட்டம் கொண்டார் என்று கூறப்படுகிறது. ஆனால் கிளிண்டன் விருந்து நடைபெற்றபோது சாப்பிட்ட மெனுவை பார்க்கும்போது முயல், சால மீன் உள்ளிட்ட வகைகளை அவர் சாப்பிட்டுள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் இந்திய உணவு வகைகளை சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது.