Categories
உலக செய்திகள்

எப்படி திரும்பி வந்தார்..? மாயமான 11 வயது சிறுமி… துப்பறியும் தலைமை ஆய்வாளர் தகவல்..!!

இங்கிலாந்தில் நள்ளிரவில் மாயமான 11 வயது சிறுமி மீண்டும் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் Fatuma kadir எனும் 11 வயது சிறுமி கடந்த 22-ஆம் தேதி அன்று 7.25 மணி அளவில் வீட்டில் இருந்ததாகவும் அதன் பிறகு அவர் மாயமானதாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் Fatuma kadir மீண்டும் பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்பியுள்ளதாக துப்பறியும் தலைமை ஆய்வாளர் பால் ரோலின்சன் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த சிறுமி லண்டனில் காணப்பட்டதாகவும், அவரை பெற்றோரிடம் கொண்டு சேர்ப்பதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் Fatuma kadir-ஐ கண்டுபிடிப்பதற்காக உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அந்த சிறுமி எங்கு சென்றார் ? எப்படி வீட்டிற்கு திரும்பி வந்தார் ? என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Categories

Tech |