மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் பகுதியில் தங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கதுரை என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இந்திரா காலனியில் தங்கதுரை குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் தங்கசாமி வெங்காயம் மற்றும் சிறுகிழங்குகளை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் தங்கதுரை அதிகாலையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்திற்கு வந்துள்ளார்.
அப்போது தங்கதுரை மின்மோட்டாரை இயக்கியதும் அதிலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கதுரையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கடையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.