மீன் பிடிக்க சென்ற 2 மீனவர்கள் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தூத்தூர் பகுதியில் ராபின் மற்றும் சூசை ததேயூஸ் என்ற மீனவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ராபின் மற்றும் சூசை ததேயூஸ் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் முட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பார்திபபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தூத்தூர் கடற்கரையை நோக்கி தாளக்கன்விலையில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி எதிரே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் ராபின் மற்றும் சூசை ததேயுஸ் வந்த மோட்டார் சைக்கிளும் லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்ட விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதில் பலத்த காயமடைந்த ராபின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து அருகிலுள்ளவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சூசை ததேயூசை குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சூசை ததேயூசை மீட்டு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இருந்ததாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த புதுக்கடை காவல் துறையினர் இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவரான விஜிகுமார் புதுக்கடை காவல்நிலையத்தில் சரணடைந்தார். அதன்பின் காவல்துறையினர் விஜிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.