விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதானா என்ற கேள்விக்கு பிரபல நடிகை பதிலளித்துள்ளார்.
விஜய் தேவர்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இத்திரைப்படத்திற்கு பின்னர் விஜய் தேவர் கொண்டா மிகவும் பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது நடிகை பார்வதி நாயர் தான் என்ற பேச்சு வார்த்தை சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் பார்வதி நாயரிடம் சமூக வலைத்தளப் பக்கத்தில் நீங்கள் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதானா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பார்வதி நாயர் ஆமாம் நான் அந்த படத்தில் நடிக்க மறுத்தது உண்மைதான் என்று கூறியுள்ளார்.மேலும் அது மிகவும் நல்ல படம். நான் அந்தப் படத்தை தவறி விட்டிருக்கக் கூடாது. எதுவாக இருந்தாலும் நமக்கு கிடைப்பது தான் கிடைக்கும். அதை விட இன்னும் நல்ல படங்கள் கிடைக்கும் என நம்பி காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.