தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து ரூபாய் 2000 இரண்டு தவணைகளாக பிரித்த்து மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நிவாரணம் ரூ.4000 பெறாதவர்கள் ஆகஸ்ட்-1 முதல் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை-31 க்குள் கொரோனா நிவாரண தொகை பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட்-1 முதல் வாங்கிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.