Categories
மாநில செய்திகள்

கடந்த ஆட்சியில்…. தரமற்ற முகக்கவசம் வழங்கப்பட்டது…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி…!!!

தமிழகத்தில் பரவி வந்த கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் ஊரடங்கு காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண உதவியும் திமுக அரசால் வழங்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் மக்களுக்கு முகக் கவசங்கள் குறைந்த விலையில் தரமானதாக வழங்க விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இவ்வாறு தமிழக அரசு எடுத்துவந்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த ஆட்சியில் வழங்கிய முகக் கவசங்கள் தரமற்றவை என்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு கவசங்களை வழங்காமல் நாடா துணியில் தயாரித்ததை வழங்கினார்கள். தரமற்ற முக கவசம் வழங்காதது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |