Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இதனை சப்ளை பண்ணுங்க” 2 கோடி ரூபாய் வரை மோசடி…. தம்பதிகளின் தில்லுமுல்லு வேலை…!!

ரெடிமேடு துணிகளை வாங்கிய தம்பதியினர் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரெடிமேடு துணிகளை மொத்தமாக விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் புதுச்சேரியைச் சேர்ந்த மணிகண்டன் விஜயநிர்மலா தம்பதியினர் கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாஷின் கடைக்கு சென்று ரெடிமேடு துணிகளை சப்ளை செய்யுமாறு கேட்டுள்ளனர். அதன்படி பிரகாஷ் 1 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள ரெடிமேடு துணிகளை சப்ளை செய்ததாகவும், அந்த தம்பதியினர் 83 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை அந்த தம்பதிகள் 11 பேரிடம் இருந்து துணிகளை வாங்கி மொத்தம் இரண்டு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாகவும், சட்டப்படி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரகாஷ் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மணிகண்டன் மற்றும் விஜய நிர்மலா தம்பதியினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |