ஏரியில் இறந்து கிடந்த நபரின் விவரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள குன்றத்தூர் காவல்துறையினருக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்த ஆணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இறந்தவரின் விபரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.