இன்ஜினியரிங் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணாவரை கிராமத்தில் கூலி தொழிலாளியான அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திக் என்ற 2 மகன்களும், மோகன செல்வி என்ற மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்ஜினியரிங் பட்டதாரியான ராஜா தனது சகோதரியிடம் அண்ணன் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்க போவதாகவும், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறி விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து மாலை அங்கு சென்ற மோகன செல்வி நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார்.
ஆனால் கதவை திறக்காததால் ராஜா தூங்குவதாக நினைத்துக்கொண்டு அவர் அங்கிருந்து திரும்பி சென்று விட்டார். இதனைத் தொடர்ந்து அன்பழகன்-செல்வி ஆகிய 2 பேரும் நீண்ட நேரமாக தட்டியும் ராஜா கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது ராஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் காவல்துறையினர் ராஜாவின் சட்டைப் பையிலிருந்த கடிதத்தை கைப்பற்றி விசாரித்தனர். அந்த கடிதத்தில் பூமியில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரு நாள் இறப்பது இயற்கையின் நியதி என ராஜா எழுதியுள்ளார். மேலும் என்னை இது வரை சந்தோஷமாக இருக்க வைத்த இறைவனுக்கு நன்றி எனவும், அனைவரையும் விட்டு பிரிந்து செல்கிறேன் எனவும் அந்த கடிதத்தில் ராஜா எழுதியுள்ளார்.