ஆர்யாவின் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சத்யராஜ் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தில் பசுபதி, கலையரசன், ஜான் கொக்கேன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். சிறந்த வரவேற்பு பெற்று வரும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரங்கன் வாத்தியார் கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டது.
நடிகர் பசுபதி நடித்த ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடக்கவிருந்தது பிரபல நடிகர் சத்யராஜ் தான் என்று தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இப்படத்தின் படப்பிடிப்பின் போது பல படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.