Categories
உலக செய்திகள்

இது இல்லமா உள்ள வரக்கூடாது…. தொடங்கவுள்ள கால்பந்து போட்டி…. தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதி….!!

பிரீமியர் லீக் கால்பந்து போட்டியை காணவரும் ரசிகர்கள்  தடுப்பூசி கடவுசீட்டு வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையை பிரித்தானியா அரசு செயல்படுத்தவுள்ளது.

பிரித்தானிய நாட்டு மக்களை தடுப்பூசி போட வைப்பதற்காக அந்நாட்டு அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் அந்நாட்டு இளைஞர்களை போடவைப்பதற்காக பல்வேறு முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில் பிரித்தானியாவில் பிரீமியர் லீக் கால்பந்து விளையாட்டு வரும் அக்டோபர் மாதத்தில் ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்வுகளில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுவர் என்ற விதிமுறையை அரசு கொண்டுவரவுள்ளது. அதிலும் ரசிகர்கள் மைதானத்தில் நுழைவதற்கு தடுப்பூசி கடவுசீட்டு அவசியம் என்று கூறியுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு விதியானது 20000த்திற்கும் மேலான  மக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிலும், பிற விளையாட்டு நிகழ்வுகளிலும் கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்தாத ரசிகர்களை நுழைவதை தடை செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனை குறித்து பிரீமியர் லீக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த விதிமுறைகளை செயல்படுத்துவதன் வாயிலாக  தடுப்பூசி செலுத்தாதவர்களை ஊக்குவிக்க முடியும். இந்த மாதிரி விளையாட்டு போட்டிகளில் பார்வையாளர்கள் மிகவும் அவசியம். ஆகவே  தடுப்பூசி செயல்திட்டத்தை இதன் மூலம் நடைமுறைபடுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் தடுப்பூசி போட முடியாதவர்கள் அல்லது போடாதவர்கள் கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை முன்வைத்தால் போதுமானதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இருக்கைகள் அல்லாத சிறு நிகழ்ச்சிகளுக்கு 5000 பேர் வரை பார்வையாளர்களாக அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |