கொரோனா கால நிவாரண தொகை பெறாதவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவராண தொகை ரூ. 4,000, இரண்டு தவணையாக வழங்கப்படுகிறது. இதை பெறாதவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பில், நிவாரண தொகை பெறாதவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த மே 10ம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுக்கு ஏறக்குறைய 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருவதாகவும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இவர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து புதிய அட்டைத் தாரர்கள் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.