தேங்காய் சம்பல்
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் – 1 கப்
சின்ன வெங்காயம் – 1/2 கப்
வரமிளகாய் – 5
கடுகு , உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் மிக்ஸியில் வரமிளகாய் , உப்பு , துருவிய தேங்காயை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை , நறுக்கிய சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதங்கியதும், அரைத்த தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கினால் சூப்பரான தேங்காய் சம்பல் ரெடி!!!