Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சட்டப்படி இது குற்றம்” பெண்ணை மிரட்டிய கிராம நிர்வாக அலுவலர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

லஞ்சம் கேட்டு பெண்ணை தொலைபேசியில் மிரட்டிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சி பகுதியில் வெற்றிவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள அரச்சலூர் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெற்றிவேல் அதே பகுதியில் வசிக்கும் புவனேஸ்வரி என்ற பெண்ணிடம் தனிப்பட்டா மாறுதலுக்காக ரூபாய் 40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து முதலில் 20,000 கொடுத்த புவனேஸ்வரியிடம் வெற்றிவேல் மீதி பணத்தையும் கொடுத்தால்தான் தனிப்பட்டா மாறுதல் தரப்படும் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து புவனேஸ்வரி ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வெற்றிவேலை கைது செய்துள்ளனர். மேலும் ஈரோடு மாவட்ட ஆர்.டி.ஓ பிரேமலதா வெற்றிவேலை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதற்கான நகலை சிறையிலுள்ள வெற்றிவேலிடம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |