பிரதமர் திரு. நரேந்திரர் மோடி அவர்களை அவதூறாக பேசிய பாதிரியாரை கண்டித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் பிரதமர் திரு. நரேந்திரர் மோடி அவர்களை தவறாக பேசிய தூத்துக்குடியில் வசிக்கும் சார்ஜ் பொன்னையா என்ற பாதிரியாரை கண்டித்து பா.ஜ.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினரான இமயம் சந்திரசேகர் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பெருந்துறை நகர பா.ஜ.க தலைவரான கருடா விஜயகுமார் என்பவர் முன்னிலை வகித்துள்ளார்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதமர் திரு. நரேந்திரர் மோடி அவர்களை அவதூறாக பேசிய பாதிரியாரை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை
எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சரவணன், நகர செயலாளர் விஸ்வநாதன், துணைத்தலைவர்கள் லோகநாதன், சரஸ்வதி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.