Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

எல்லாம் தடை செய்யப்பட்ட பொருட்கள்… சட்ட விரோதமான செயல்… கைது செய்த காவல்துறையினர்…!!

தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய்த குற்றத்திற்காக 150 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சூப்பிரண்டு கலைச்செல்வன் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இம்மாவட்டத்தில் காவல்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த சோதனையின் போது தடைவிதிக்கப்பட்ட பான்மசாலா மற்றும் குட்கா ஆகிய புகையிலை பொருட்களை விற்பனை செய்ததும் அதை பதுக்கி வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதனால் இம்மாவட்டத்தில் வசிக்கும் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரூர் பேருந்து நிலையம், அண்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைந்திருக்கும் மல்லிகை கடை மற்றும் பெட்டிக்கடைகள் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் கடைகளில் வைத்து மற்றும் புகையிலையை விற்பனை செய்த 29 நபர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக புகையிலைகளை விற்ற குற்றத்திற்காக 150 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |