இட்லிமாவு
தேவையானபொருட்கள்:
இட்லிஅரிசி- 4 கப்
உளுந்து – 1 கப்
உப்பு – 3 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
செய்முறை :
முதலில் அரிசி மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட வேண்டும். பின் இரண்டையும் தனித்தனியே ஆட்டிக் கொள்ள வேண்டும் . அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உளுந்து அரைக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீர் தொட்டு அரைக்க வேண்டும். இல்லையேல் உளுந்து ஒழுங்காக அரை படாது . பின்னர் மாவுகளை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் இதனை 8 மணி நேரம் அப்படியே புளிக்க விட்டு இட்லி , தோசை செய்தால் பஞ்சி போல் இருக்கும் .