தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கல்லூரி கல்வி இயக்குநர் சற்று முன் அறிவித்த அறிவிப்பில் நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான அறிவிப்பின்படி நாளை முதல் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் என்ற www.tneaonline.org இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வந்ததையடுத்து நாளை முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் B.E., B.Tech படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு நாளை முதல் தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.