சாட் மசாலா
தேவையான பொருட்கள் :
காய்ந்த மிளகாய் – 8
தனியா – 1/4 கப்
சீரகம் – 1/4 கப்
மாங்காய் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
கறுப்பு உப்பு – 1/4 கப்
செய்முறை :
முதலில் வெறும் கடாயில் சீரகம் மற்றும் தனியா சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனை ஆறவைத்து , இவற்றோடு காய்ந்த மிளகாய், மாங்காய் தூள், மிளகு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் தூளாக்கிய கறுப்பு உப்பை நன்கு கலந்தால் சாட் மசாலா தயார் !!!